என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எறிபந்து போட்டி"
- ஒசூரில் மாநில அளவிலான சப்ஜூனியர் எறி பந்து போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்ட அணியினர் சாதனை படைத்தனர்.
- தமிழகத்தின் 37 மாவட்டங்களிலிருந்து 16 வயதிற்கு உட்பட்ட 800 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு விளையாடினர்.
கிருஷ்ணகிரி மாவட்ட எறிபந்து சங்கத்தின் சார்பில், மாநில அளவி லான சப்-ஜூனியர் எறிபந்து போட்டிகள், ஓசூர் தின்னூரில் உள்ள தனியார் பள்ளியில், 2 நாட்கள் நடைபெற்றது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இந்த போட்டிகளை, முதன்மை விருத்தினராக கலந்து கொண்ட ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா தொடங்கி வைத்தார்.
இந்திய எறிபந்து சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட எறிபந்து சங்க தலைவர் செந்தமிழ்செல்வன் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தவமணி வரவேற்றார். கிருஷ்ணகிரி மாவட்ட எறிபந்து சங்க புரவலரும், ஓசூர் மாநகராட்சி எதிர்கட்சி தலைவருமான எஸ். நாராயணன், தனியார் பள்ளி தாளாளர் ஆர்.தீபா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதில், தமிழகத்தின் 37 மாவட்டங்களிலிருந்து 16 வயதிற்கு உட்பட்ட 800 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டிகள், பகல், இரவாக 122 ஆட்டங்கள் நடைபெற்றது.
நேற்று போட்டிகள் நிறைவடைந்து, அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. போட்டிகளில் மாணவர் மற்றும் மாணவியர் அணியில் கிருஷ்ணகிரி மாவட்ட அணியே முதலிடத்தை பிடித்து சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றன.மேலும் வீரர், வீராங்கனை யருக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டது.
அதேபோல், சென்னை மாவட்ட அணி மாணவ, மாணவியர் அணி 2-வது இடத்தையும் , 3-வது இடத்தை ஈரோடு மாவட்ட மாணவ, மாணவியர் அணியும் பிடித்தன. மேலும் இதில், பள்ளி முதல்வர் பவானி சங்கரி, ஆசிரிய, ஆசிரியை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விளையாட்டு போட்டி களில் ஸ்டான்லி மெட்ரி குலேஷன் மேல்நிலை பள்ளி மாணவர்கள் எறிபந்து போட்டி யில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.
- இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, சரக அளவில் நடைபெற்று வரும் குழு விளையாட்டு போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரி குலேஷன் மேல்நிலை பள்ளி மாணவர்கள் எறிபந்து போட்டி யில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.
பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் வயது வரம்பு அடிப்படையில் U-19 பெண்கள் பிரிவில் முதலிடமும், U-19 ஆண்கள் பிரிவில் முதலிடமும், U-14 ஆண்கள் பிரிவில் இரண்டாமிடமும், பிடித்து வெற்றி பெற் றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்த குமார் மற்றும் சங்கீதா ஆகியோரை பள்ளியின் தாளாளர் முருகேசன், செயலாளர் பிரு ஆனந்த் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக அணி 2-ம் இடம் பெற்று தமிழ்நாட்டுக்கும், திருப்பூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தார்.
- மாணவன் கதிர்வேல் தமிழக அணிக்காக கலந்துகொண்டு விளையாடினார்.
திருப்பூர்:
தேசிய அளவிலான எறிபந்து போட்டி நடைபெற்றது. இதில் திருப்பூர் கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி மாணவன் கதிர்வேல் தமிழக அணிக்காக கலந்துகொண்டு விளையாடி வெற்றி பெற்றார். தமிழக அணி 2-ம் இடம் பெற்று தமிழ்நாட்டுக்கும், திருப்பூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தார்.
வெற்றி பெற்ற மாணவனுக்கு பள்ளி தலைவர் மோகன் கே.கார்த்திக், தாளாளர் வினோதினிகார்த்திக், செயலாளர் நிவேதிகாஸ்ரீராம், நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா நிக்கில் சுரேஷ், பள்ளி முதல்வர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
- முதலிடம் பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார்கள்.
- மாநில அளவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர்.
பல்லடம் :
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது வழக்கம். குறுமையம், கல்வி மாவட்டம் என அனைத்திலும் முதலிடம் பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார்கள்.
அந்தவகையில் இந்த 2022 - 2023-ம் கல்வி ஆண்டின் 14 வயதிற்கு உட்பட்ட மாநில அளவிலான எறிபந்துப் போட்டி திருச்சி மாவட்டம், கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
அதில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர், பொ.வெ.க. மேல்நிலைப்பள்ளி வீரர்கள் காலிறுதியில் திருவள்ளூர் மாவட்ட அணிக்கு எதிராகவும், அரையிறுதியில் தருமபுரி மாவட்ட அணிக்கு எதிராகவும் விளையாடி வெற்றி பெற்றனர்.
இறுதிப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணியுடன் விளையாடி அதிலும் வெற்றி பெற்று மாநில அளவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர்.
இந்த பள்ளி அணியினர் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடிய மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் நிரேஷ்குமார், சுகுணா ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயபாலன் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரிய-ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் ஆகியோர் பாராட்டினர்.
- இந்தக் கல்வி ஆண்டுக்கான மாநில அளவிலான எறிபந்துப் போட்டி நாமக்கல் மாவட்டம், கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
- பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
பல்லடம்:
தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் குறுமையம், கல்வி மாவட்டம் என அனைத்து போட்டிகளிலும் முதலிடம் பெறும் அணிகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார்கள். அந்த வகையில் இந்தக் கல்வி ஆண்டுக்கான மாநில அளவிலான எறிபந்துப் போட்டி நாமக்கல் மாவட்டம், கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
அதில் பொங்கலூர் பொ.வெ.க மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காலிறுதியில் தென்காசி மாவட்ட அணிக்கு எதிராகவும், அரையறுதியில் கரூர் மாவட்ட அணிக்கு எதிராகவும் விளையாடி வெற்றி பெற்றனர். நிறைவாக நாமக்கல்லில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோயம்புத்தூர் மாவட்ட அணியுடன் விளையாடி வெற்றி பெற்று மாநில அளவில் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தனர். பொங்கலூர் பொ.வெ.க மேல்நிலைப் பள்ளி அணியினர் தொடர்ந்து 2-வது ஆண்டாக சாம்பியன் பட்டம் வெல்வது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடிய மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் நிரேஷ் , சுகுணா ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயபால், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை எஸ்.எப்.எஸ். மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் எறிபந்து போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் பாரதிராஜா, மற்றும் ஒருங்கிணைப்பாளர் குமரேசன், உடற்கல்வி ஆசிரியர் ராஜேஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்